அணியியல் - மிறைக்கவி

385 

 

2. கூடாசதுக்கம்

கூட சதுக்கம் என்பது ஈற்றடி எழுத்து ஏனை மூன்று அடியினும் கரந்து நிற்பச் சொற்சேர்த்துப் பாடுவது.

வரலாறு :

     ‘புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக் கட்பிறைப் பற்கறுத்த
     பகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித் துர்க்கைபொற்புத்
     தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைபத் தித்திறத்தே
     திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே.

என வரும்.

[நெருப்பை ஒத்த கடிய சொற்களையும் படைக்கலன்கள் அணிந்த கைகளையும்,
வெகுளிப் பார்வையையும், பிறை போன்ற பற்களையும் உடைய பகைவரான அவுணர்
கூட்டம் அழியுமாறு கொன்ற காஞ்சிமாநகரிலுள்ள, அழகு தங்கிய இனிய யாழொலி
போன்ற சொற்களை உடைய கிளியை ஒத்த கொற்றவைமாட்டுப் பத்தி செய்யும் திறத்தில்
ஈடுபடாத மனத்தை நல்வழிப் படுத்திய பின், இருவினையும் நீங்கத் தவம் செய்தல்
வேண்டும்.

கல்வி -- தவம் முதலாகிய விச்சை.

புகைத்தகைச் சொல் - படைக்கை - கதக்கண் - பிறைப்பல் - கறுத்தபகை எனவும்,
பொற்புத் தகைத்த - தித்தித்த துத்தத்த (துத்தம் என்ற இசைபோன்ற) சொல்தத்தை
துர்க்கை - எனவும் பொருள் செய்க.

இது கூடசதுர்த்தம் எனவும் கூறப்படும்.

கூடம் - மறைவு, சதுர்த்தம் - நான்காம் அடி.

நான்காம் அடியிலுள்ள எழுத்துக்கள் ஏனை மூன்று அடிகளிலும் கலந்து
காணப்படுவதால், இச்சித்திரகவி இப் பெயர்த்து ஆயிற்று.