386

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 

      ‘பாடலின் நாலாம் பதம்பொறி வரியிடைக்
      கூடமுற் றதுவே கூட சதுர்த்தம்’ - மா.293 ]

3. மாலை மாற்று

      மாலைமாற்று என்பது ஒரு பாட்டை ஈற்றை முதலாக வாசித்தாலும் அப்பாட்டேயாவது.

வரலாறு,

      ‘நீவாத மாதவா தாமோக ராகமோ
      தாவாத மாதவா நீ’

என வரும்.

[ நீங்காத பெரிய தவத்தை உடையாய் ! வலிய மயக்கந்தரும் ஆசை நீங்கமாட்டா.
ஆதலால் பெண்ணாசையை நீக்கு.

நீவாத மாதவா ! தா(வலிய) மோகத்தின் இராகமோ தாவாத (நீங்காத) ஆதலின் மாது
அவா நீ (நீப்பாயாக) - என்று பொருள் செய்க.

இம்மாலை மாற்றுச் சித்திரகவியாக ஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருப்பதிகத்தைக்
காண்க.

     ‘ஒருசெயுள் முதலீறு உரைக்கினும் அஃதாய்
     வருவதை மாலை மாற்றென மொழிப.’ - மா. 287

     ‘இறுதிமுத லாக எடுத்துவா சிப்பினும்
     அதுவே யாவது மாலைமாற் றாகும்.’ - மு. வீ. சொ. 18 ]

4. மாத்திரைச் சுருக்கம்

     மாத்திரைச் சுருக்கம் என்பது ஒருசொல் ஒரு மாத்திரை குறையப் பிறிது
ஒரு சொல்லாய்ப் பிறிது ஒரு பொருள் வரப் பாடுவது.