‘நேரிழையார் கூந்தலின்ஓர் புள்ளிபெறின் நீள்மரமாம்,
நீர்நிலைஓர் புள்ளிபெற நெருப்பாம், -- சீர்அளவு
காட்டொன்று ஒழிப்ப இசையாம், -- கவின் அளவும்
மீட்டுஒன்று ஒழிப்ப மிடறு’
என வரும்.
[பெண்களின் கூந்தல் (ஓதி) ஒருபுள்ளி பெற்றால் ஒரு நீண்ட மரமாகும். (ஒதி)
நீர்நிலை (ஏரி) ஒருபுள்ளி பெற்றால் நெருப்பாகும். (எரி) சிறப்புடைய பாட்டு (காந்தாரம்)
ஒரு நெட்டெழுத்தைக் குறுக்கினால் பண் ஆகும். (கந்தாரம்) பிறிது ஒரு
நெட்டெழுத்தையும் குறுக்கினால் கழுத்தாகும். (கந்தரம்) (ஏ ஓ என்ற நெடில்களைக்
குறிலாக்கப் பண்டையார் புள்ளியிட்டு எழுதிய மரபை நோக்குக.)
ஓதி - மகளிர் தலைமயிர் ; ஒதி - உதி என்ற மரம். ஏரி - நீர்நிலை ; எரி -
நெருப்பு. காந்தாரம் - காடு ; காந்தாரம் - ஒரு பண் ; கந்தரம் - கழுத்து. இது
மாத்திரைச் சுருக்கமாமாறு காண்க.
‘மாத்திரை சுருங்க மறுபொருள் உணர்த்துரை
மாத்திரைச் சுருக்கம் எனவகுத் தனரே.’ - மா. 299 அ.
‘ஒருபொருள் தருஞ்சொலோர் மாத்திரை குறைய
மற்றொரு பொருள்தரல் மாத்திரைச் சுருக்கம்.’ - மு.வீ. சொ. 20 ]
5. மாத்திரை வருத்தனம்
மாத்திரை வருத்தனம் என்பது இதனையே மறுதலைப் படப்பாடுவது.
அது வந்துழிக் காண்க.
[ ‘மாத்திரை பெருக மறுபொருள் உணர்த்துரை
மாத்திரைப் பெருக்கம் எனவகுத் தனரே.’ - மா. 299 அ.