‘மாத்திரைச் சுருக்கம் மறுதலைப் படஒரு
மாத்திரை ஏற்றிடின் மாத்திரை வருத்தனம்.’ - மு. வீ. சொ. 21
‘தருவொன்றை நீட்டிடில் தருணி கூந்தலாம்,
மருவுதீ நீட்டிட மாண்புறும் நீர்நிலை,
திருவுறு கழுத்தினை நீட்டத் தீம்பணாம்,
உருவமேல் நீட்டிடின் உயர்ந்த காடுமாம்’
என்று அமைத்துக் கொள்க.
‘அளவொன்று ஏறிய’ என்ற தண்டியலங்காரப் பாடலை நோக்குக. ]
6. எழுத்து வருத்தனம்
எழுத்து வருத்தனம் என்பது ஓர்எழுத்தான் ஒரு மொழியாய்ப் பொருள் பயந்து,
பின் ஓர் எழுத்து ஏற்றுப் பிறிது ஒரு மொழியாய்ப் பொருள் பயந்து, அவ்வாறே
முறையானே ஏற்ற ஏற்ற ஒவ்வொரு மொழியாய்ப் பொருள் பயப்பப் பாடுவது.
‘ஏந்திய சங்கமும், முன்னால் எடுத்ததுவும்,
பூந்துகிலும், மால்உந்தி பூத்ததுவும், -- வாய்ந்த
அலைவுஇல்எழுத்து அடைவே ஓர்ஒன்றாய்ச் சேர்க்கத்
தலை, மலை, பொன், தாமரைஎன்று ஆம்’
என வரும்.
[ திருமால் ஏந்திய சங்கும் (கம்), கண்ணனாய் முன்பு குடையாய் ஏந்தியதும் (நகம்),
திருமால் ஆடையாக அணிந்ததும் (கநகம்), அவன் உந்தியில் பூத்ததும் (கோகநகம்),
ஒவ்வோரெழுத்தாகச் சேர்த்திவரத் தலை (கம்) மலை (நகம்) கொன் (கநகம்) தாமரை
(கோகநகம்) என்றாகும்.
கம்பு என்பது சங்கம். அது கம் என்று கடைக் குறைந்து நின்றது. கம் என்பதன்
பொருள் தலை என்பது.
|
|
|