கம், நகம், கநகம், கோநகம் - என எழுத்து வளர வளர, வெவ்வேறு
பொருள்படும் சொற்றன்மை வாய்ந்தவாறு காண்க.
‘ஒருதொடர் மொழியீற் றோரெழுத் தினைப்பிரித்து
ஒருபொருள் தரவைத்து ஓரொன் றாக
மிக்கபல் பொருள்தர மேல்வைப் பனவே
அக்கர வருத்தனை ஆகும் என்ப.’ - மா. 278
‘பதங்களின் அக்கரங் களைப்பகுத் ஒன்றற்கு
உரியஅக் கரங்களை மற்றொரு பதத்தொடு
புணர்த்திநூ தனப்பொருள் புதுக்குவது எழுத்து
வருத்தனம் ஆம்என வழுத்தப் படுமே.’ - மு.வீ.சொ. 16 ]
7. ஒற்றுப் பெயர்த்தல்
ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒருமொழியும் தொடர் மொழியுமாய்ப் பொருள்படுமவற்றை அப்பொருள் ஒழிய வேறுபொருள்படவைத்துப் பாடுவது.
வரலாறு :
‘வண்புயலைக் கீழ்ப்படுத்து, வானத் தருமலைந்து,
மண்குளிரும் சாயல் வளர்க்குமாம் ; -- தண்கவிகைக்
கொங்குஆர் அலங்கல் குலதீபன், கொய்பொழில்சூழ்
கங்கா புரமாளி கை.
என வரும்.
குளிர்ந்த வெண்கொற்றக் குடையையும், தேன் பொருந்திய அத்திப்பூ மாலையையும்
உடைய சோழ குலத்துத் தீபம் போன்றவனாய்ப் பொழில் சூழ்ந்த கங்காபுரத்தை ஆளும்
சோழன் கைகள் கொடையால் கார்மேகத்தைத் தோற்கடித்து, கற்பகத்தோடு போரிட்டு,
உலகம் மகிழ்தற்குக் காரணமாகிய அருளை வளர்க்கும்.
கங்காபுரியிலுள்ள மாளிகைகள், மேக மண்டலத்தையும் கடந்து ஓங்கிக் கற்பக
மரங்களை உயர்ந்த தம் தலையில் சூடி, உலகிற்குத் தம் பெருவடிவால் குளிர்ந்த நிழலை
வழங்கும். |
|
|