அணியியல் - பொது

39 

     நெடுந்தொகை - 13 முதல் 32 அடிகாறும் அமைந்த பாடல்களின் தொகுப்பாகிய
 அகநானூறு.

     புணர்தல் பிரித்தல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற தொழில்களாகிய
 உரிப்பொருள் பற்றிய பாடல்களின் தொகுப்பு ஐந்திணை ஐம்பது முதலியன.

     கலிப்பாடல்களின் தொகுப்புக் கலித்தொகை ஆகும்.

     குறுந்தொகை - நான்கடிமுதல் எட்டடிகாறும் அமைந்த குறைந்த அடிகளை
 உடைய பாடல்களின் தொகுப்பாகும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 5

    "மன்னுதொகை கோப்பிற் பொருளன"

- வீ. 178 

    "உவவாத கேள்வி ஒருவர் பலரால்
     பலவாய்ப் பகர்பா இனமாய் - இலகுபொருள்
     எண்பாட் டளவுதொழில் இடங்காலஞ் சினையின்
     பண்பாந் தொகைநிலைச்சொற் பா"

- மா. 69 

    "தொகைநிலை பலரால் சொல்லப் பட்டுப்
     பலபாட் டாக வருநவும் ஒருவரால்
     பகரப் பட்டுப் பலபாட் டாக
     வருநவும் ஆம்என வழுத்தினர் புலவர்"

- மு. வீ. செய்யுளணி 2 

    "கருதரு பொருளிடம் காலம் தொழிலெனும்
     நான்கினும் பாட்டினும் அளவினும் நடக்கும்"

- மு. வீ. செய்யுளணி 3 

தொடர்நிலைச் செய்யுள்

 626. பொருளினும் சொல்லினும் இருவகை தொடர்நிலை.

     இது தொடர்நிலைச் செய்யுள் ஆமாறு கூறுகின்றது.