அஞ்சத்தக்க போரிடும் அம்பிற்குப் பெயர் என்ன? -- அம்பு.
அழகுக்கு உரிய பெயர் யாது? -- அம்.
சிவபெருமான் வீற்றிருக்கும் இருப்பிடம் யாது? -- ‘திருவேகம்பம்’.
திரு, ஏகு, அம்பு, அம் - திருவேகம்பம் ஆயினவாறு.
‘துதித்திடும் ஒருபொருள் தொடர்ச்சொலைப் பிரித்து
மதிப்பிட வினாய வகைக்கெதிர் மொழியாய்
விதிப்பட உரைப்பது வினாஉத் தரமே.’ - மா. 280
‘வினாவொடு விடையும் விரிந்து வருவது
வினாவுத் தரமென விளம்பப் படுமே.’ - மு. வீ. சொ. 15 ]
9. நாகபந்தம்
நாகபந்தம் என்பது இரண்டு பாம்பாக மாறி எழுதிய ஒரு நேரிசை
வெண்பாவும்,இன்னிசை வெண்பாவும் எழுதிச் சந்நிதிகளில் நின்ற எழுத்தை
மற்றை இடங்களிலும் உறுப்பாய் நிற்கப் பாடுவது :
[ ‘வரியரவு இரண்டாய் வால்வயிறு இரண்டாய்த்
தெரிமூலை நான்காய்ச் சிறந்துமும் மூன்றுடன்
நிலைபெறும் ஒருபான் இருபான் நிறீஇத்
தலைஇரண் டெழுத்தாய்ச் சார்தரச் சந்தியின்
கவினுறுத் தெழுத்துக் கலந்துறுப் பாக
நவிலிரு பாவே நாக பெந்தம்.’ - மா.285 ]
வரலாறு :
‘அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர்
தெருளின் மருவாதசீர்ச் சீரே ! -- பொருவிலா
வொன்றே ! யுமையா ளுடனே யுறுதிதரு
குன்றே தெருள வருள்’
எனவும்,
|
|
|