392

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "மருவி னவருளத்தே வாழ்சுடரே, நஞ்சு
     பெருகொளியான், றேய பெருஞ் சோதி -- திருநிலா
     வானஞ் சுருங்க மிகுசுடரே ! சித்த
     மயரு மளவை யொழி"

 எனவும் வரும். (உரை வெளிப்படை)

    "வாலுள் இருமூன்றும் தலையில் இரண்டெழுத்தும்
     மூலைகள் நான்கும் வயிறுஇரண்டும் -- ஐவைந்தாம்
     நாலெட்டு நாலைந்தே ழாகி நடைபெறுமே,
     சேலிட்ட கண்அரவின் சீர்"

 இதன்வழியே எழுதிக் கண்டுகொள்க.

10. முரசபந்தம்

     முரசபந்தம் என்பது ஓடிர ஒருவரியாய் நான்கு வரி எழுதி, மேல் இரண்டு வரியும்
 தம்முள் கோமூத்திரியாகவும், கீழ் இரண்டு வரியும் தம்முள் கோமூத்திரியாகவும்,
 சிறுவார் போக்கியும், மேலில் வரி இரண்டாம் வரியினும் மூன்றாம் வரியினும் நான்காம்
 வரியினும் கீழ் உற்று மீண்டும் மேல்நோக்கி அவ்வாறே வந்தும், கீழ் நோக்கி
 அவ்வாறே சிறுவார் போக்கியும், கீழில் வரியிலும் அவ்வாறே மேல்நோக்கி மேலில்
 வரியுற்றுக் கத்திரிகைமாறாய்ப் பெருவார் போக்கியும அவ்வரியேயாகப்பாடுவது.

   ["எழுதிய வரிநாலி னுள்முத வீறன
     பழுதற மந்திரிச் செலவாய்ப் படர்ந்தயல்
     ஒழுகியும் கீழ்மேற் றனதீற் றுற்றபின்
     அறைதொறும் ஏனைய அடைவே பாதியின்
     முறைதடு மாறுதல் முரச பெந்தம்"                           - மா. 28]