அணியியல் - மிறைக்கவி

393 

 வரலாறு :

    "கான வாரண மரியவா யினதோ
     தான வாரண மரியவா யினதோ
     மான வாரண மரியவா யினதோ
     கான வாரண மரியவா யினதோ"
 என வரும்.

     [மான வாரணம் அரி அவாயினது, காண ஆரணமும் தான வாரணமும்
 அரிதாகிக் கானம் வாரணமும் அரியும் அவாயினதாயிற்று.

     பெருமை பொருந்திய யானை போன்ற மன்னன் பகைமையை அவாவி
 அழித்த நாடு, ஓசையுடைய வேதமும் மதயானை யீட்டமும் அரியதாகிக் காட்டுக்
 கோழியும் சிங்கமும் விரும்பும் காடாயிற்று.]

11. திரிபாகி

     திரிபாகி என்பது மூன்றெழுத்துக் கூட ஒரு மொழியாய், அதன்
 முதலெழுத்தும் கடை எழுத்தும கூட மற்றொரு மொழியாய், இடை எழுத்தும்
 கடை எழுத்தும் கூட மற்றொரு மொழியாய்ப் பொருள் வேறுபடப் பாடுவது.

    ["மூன்றெழுத்து ஒருமொழி முதலீறு இடையீறு
     ஆன்ற பொருள்பிற வாந்திரி பதாதி."                     - மா. 299 அ.

    "மூன்றெழுத்து ஒருபெயர் முதலிடை முறிக்கின்
     முப்பெயர் எதிர்முளைப் பதுதிரி பாகி."               - மு. வீ. சொ. 23]

 வரலாறு :

    "மூன்றெழுத்தும் எங்கோன், முதல்ஈறு ஒருவள்ளல்,
     ஏன்றுஉலகம் காப்பது இடைகடையாம், -- ஏன்றுரைப்பின்,
     பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேத்தும்,
     காமாரி, காரி,மா ரி"
 என வரும்.