[பூக்களை அருச்சித்து உலகத்தவர் போற்றுபவனாகிய, மன்மதனை அழித்த சிவபெருமானுடைய திருநாமம் காமாரி என்ற மூன்றெழுத்தாகும். முதலெழுத்தும் ஈற்றெழுத்தும் கடைச் சங்ககால வள்ளல்களும் ஒருவன் பெயராகிய காரி ஆகும். நடு எழுத்தும் கடை எழுத்தும் உலகம காக்கும் மழையின் பெயராகிய மாரி ஆகும்.]
திரிபங்கி என்பது ஒரு செய்யுளுறுப்பு அமைந்து ஒரு பொருள் பயந்ததனையே மூன்றாகப் பிரித்து எழுத வெவ்வேறே தொடையும் பயனிலையும் பொருளும் பயப்பப் பாடுவது.
"நனிஒரு பாவாய் நடந்தது தானே
தனிதனி மூன்றாம் சால்புறு பொருண்மையின்
பகுப்பநிற் பதுதிரி பங்கிய தாகும்." - மா. 296
"ஒருகவிக் குட்கவி மூன்றெழு குவது
திரிபங்கி என்மனார் தெளிந்திசி னோரே." - மு. வீ. சொ.22
வரலாறு :
"ஆதரந்தீர் அன்னை போலினியாய் ! அம்பிகா பதியே !
மாதர்பங் கா ! வன்னி சேர்சடை யாய் ! வம்பு நீள்முடியாய் !
ஏதமுய்ந் தோர்இன்னல் சூழ்வினை தீர்எம்பிரான் ! இனியாய் !
ஓதும்ஒன் றே, உன்னு வார்அமு தே ! உம்பர் நாயகனே."
இதனையே,
ஆத ரம்தீர்
மாதர் பங்கா !
ஏதம் உய்ந்தோர்
ஓதும் ஒன்றே !
எனவும்,
|
|
|