அணியியல் - மிறைக்கவி

395 

    "அன்னைபோல இனியாய் !
     வன்னிசேர் சடையாய் !
     இன்னல்சூழ் வினைதீர்
     உன்னுவார் அமுதே !

 எனவும்,

    "அம்பிகா பதியே !
     வம்புநீள் முடியாய் !
     எம்பிரான் இனியாய் !
     உம்பர்நா யகனே !

 எனவும் மூன்றாகப் பிரித்து அவ்வாறாதல் கண்டுகொள்க.

     [ஆதரம் -- உலகப்பற்று. அம்பிகா -- பார்வதி ;
     வன்னி -- சமீபத்ரம். வம்பு -- புதிய அழகு ;
     ஏதம் -- உலகபந்தமாகிய துன்பம்.]

13. பிறிதுபடு பாட்டு

     பிறிதுபடு பாட்டு என்பது ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபட
 உரைப்பச் சொல்லும்பொருளும் வேறுபடாது வேறு ஒரு செய்யுளாகப் பாடுவது

    ["பிறிது ஒன்று ஆதல் பிறிதுபடுபாட்டே"                     - மா. 291

    "பாவடி தொடைகளும் படுப்ப வேறு
     மேவருஞ் சொற்பொருள் வேறு படாமல்
     மற்றொரு பாவாய் வருவது பிறிது
     படுபாட் டெனப்பெயர் பகரப் படுமே."                - மு. வீ. சொ. 25] 

 வரலாறு

    "தெரிவருங் காலின் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு
     வரிஅளி பாட, மருவரு வல்லி இடையுடைத்தாய்,
     திருதரு காமர் மயிலியல் ஆயம்நண் ணாத்தேமொழி
     அரிவைதன் நேர்என லாம்இயற்று, ஐயயாம் ஆடிடமே"

 எனவரும். ஐஞ்சீர் நான்கடிக் கொச்சகக் கலித்துறையே..