என வரும். இதனுள்,
"கருவார் கச்சித
திருவே கம்பத்
தொருவா வென்னீ
மருவா நோயே !"
எனப் பிறிது ஒரு செய்யுள் போந்தவாறு கண்டுகொள்க.
[எங்கட்குத்தாவா அருங்கலம் ! நீயே தாயே ; யாம் நோவு அவா ஈரு(க) ;
எமது (சார்வாயுள்ள) நீ பின்னை வெருவா வருவது ஓர் (ஆராய்வாயாக) ; அ(து) தப
எம்புகல் வேறு இருத்தி வைத்திசின் ; இச்சை கவர்.
எங்களுக்குக் கெடாத அரிய செல்வமாகிய தெய்வமே ! நீயே எங்களுக்குத்
தாய் ஆவாய். யாம் வருந்துவதற்குத் காரணமாகிய உலகப்பற்றுக்களை நீக்குவாயாக ;
எமக்குப் பற்றுக் கோடாம் நீ எங்க எங்கள் மற்றைய காமங்களை மாற்றி உலகத்
தொடர்பிலிருந்து எங்களை விலக்கி வேறாக வைப்பாயாக.]
கரந்துறை செய்யுள் என்பது ஒரு செய்யுட்குப் பிறிது ஒரு செய்யுட்சொல் புகுதாது
எழுத்துப் பொறுக்கிக் கொள்ளலாம்படி பாடுவது.