398

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    ["முதலொரு செய்யுள் முடித்ததன் ஈற்றின்
     பதமன் இறுதியின் பயிலெழுத் துத்தொடுத்து
     இடையிடை யிட்டெதிர் ஏறாய் முதலயல்
     அடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங்கு
     உறைவது கரந்துறை செய்யுளென் றுரைபெறும்."               - மா. 288 

    "ஓப்புர வினிலிருந்து ஒர்பாக் குரியன
     அக்கரம் பொருக்கிக் கொளலா கும்படி
     பாடல் கரந்துறைப் பாட்டென மொழிப."              - மு. வீ. சொ. 13] 

 வரலாறு :

    "அகலல்குல் தேரே, அதரம் அமுதம்,
     பகர்தற்கு அரிதுஇடையும், பாரக்கின், -- முகமதியம்,
     முத்தென்ன லாம்முறுவல், மாதர் முழுநீல
     மைத்தடங்கண், வெவ்வேறு வாள்"

 எனவரும். (உரை வெளிப்படை) இதனூள் போந்த செய்யுள் :

    "அகர முதல எழுத்தெல்லா மாதி
     பகவன் முதற்றே உலகு."                                   - குறள் 1 

 எனக் காண்க.

16. சக்கரம்

     சக்கரம் நான்கு ஆரல் சக்கரமும் ஆறு ஆரல் சக்கரமும் எட்டு ஆரல் சக்கரமும்
 என மூவகைப்படும். அவற்றுள் நான்கு ஆரல் சக்கரம் இரண்டு வகைப்படும்.

    ["சக்கரத் துள்தடு மாறுதல் தானே
     சக்கர பெந்தம் எனச்சாற் றினரே."                          - மா. 281 

    "அதுவே,
     நாலிரு மூன்றிரு நாலென நாட்டும்
     சால்பினி லார்புனை தன்மைய ஆகும்."                      - மா. 282