40

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இ-ள் :   பொருளினால் தொடர்தலும் சொல்லினால் தொடர்தலும் என
 இருவகைப்படும் தொடர்நிலைச் செய்யுள் என்றவாறு.

     எனவே, பொருள் தொடர்நிலைச் செய்யுளும் சொல் தொடர்நிலைச் செய்யுளும்
 எனத் தொடர்நிலைச் செய்யுள் இரண்டு வகைப்படும் என்பது ஆயிற்று. இரண்டு
 என்னாது "வகை" என்ற மிகையானே, மூன்றாவது பொருளினானும் சொல்லினானும்
 தொடர்தலும் உண்டு எனக் கொள்க.

விளக்கம்

     பொருளினால் தொடர்வன - ஒரு செய்தியைப் பற்றித் தொடர்ந்து பாடப்படும்
 பாடல்களின் தொகுப்பாகிய சீவக சிந்தாமணி, இராமாவதாரம் போல்வன. இவையே
 கற்பார்க்குப் பெருவிருந்தாகும்.

     சொல்லால் தொடர்வன - பொருள் தொடர்பு எதுவும் இன்றி முதற்பாடலின்
 ஈற்றுச்சீரோ சொல்லோ எழுத்தோ அடுத்த பாடலின் முதற்சீராகவோ சொல்லாகவோ
 எழுத்தாகவோ முறையே அமையுமாறு அந்தாதித் தொடையால் பாடப்படும் கலம்பகம்
 போல்வன.

     பொருளினாலும் சொல்லினாலும் தொடர்வன - தம் ஆன்மீக அனுபவத்தைச்
 சடகோபர் அந்தாதித் தொடையில் தொடர்ச்சியாக அருளிச் செய்த
 திருவாய்மொழி போல்வன.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 6

     "காப்பிய மாம் நூல்"                                       - வீ. 178