பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க
தண்மை யகத்துப் பதுமத்த மாதர் தடங்கண்களே."
இஃது ஆரல்மேல் ஒன்பது ஒன்பது எழுத்தாய், நடுவுரகர ஆகாரமாய்ச் சூழ்ந்த குறட்டில "போதிவானவன்" என்னும் பெயர் நின்று, சூட்டின் மேல் இருபத்துநான்கு எழுத்தாய் முற்றுப பெற்றுச் செய்யுள் முடிந்தவாறு காண்க.
கைகளால் மீட்டும் பண்ணையுடைய யாழ் பயில்வோர் விரும்பும் நாகையில், மன்மதனுடைய போரில் நமக்கு அபயமளித்த தலைவி கண்களுக்குத் திருமகள், கலைமகள் ஆகியவர் கண்களும் ஒவ்வா - என்று தலைவியின் குறிப்பு நோக்கினால் மகிழ்ந்த தலைவன் தன் நெஞ்சிற்குக கூறியவாறு.]
எட்டு ஆரல் சக்கரம் வருமாறு :
"மலர்மலி சோலை யகனலங் கதிர்க்க
மடமயி லியற்றக, மாதிரம் புதைத்து
வளைந்துபுகல் மேக வல்லிருண் மூழ்க,
வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி,
மன்னுமா மடமொழி, வடிவாள் வளவன்
கன்னித் துறைவன் கனகச் சிலம்பே"
என வரும். இஃது ஆரல் மேல் அவ்வாறு எழுத்தாய், நடுவே சுகரம் நின்று, குறட்டின் மேல "அறமே தனமாவது" என்னும் சொல் நின்று, சூட்டின்மேல் முப்பத்திரண்டு எழுத்தால் முற்றுப் பெற்றுச் செய்யுள் முடிந்தவாறு காண்க.
[வாட்படை ஏந்திய சேரனாகவும் கன்னித் துறைவனாகிய பாண்டியனாகவும் சோணாட்டோடு ஏனை இரண்டு நாடுகளையும் ஆண்ட சோழ மன்னனுடைய பொன்மயமான மலையில் மலர் மிக்க |
|
|