அணியியல் - மிறைக்கவி

401 

 சோலையினுள் நலம் சிறக்க, மயில்கள் களிக்க, கார்மேகம் திசைகளை மூடி உலகை
 இருளச்செய்ய, வண்டுகள் செறியும் மயிர் முடியை ஒப்பனை செய்துகொண்டு சிறந்த
 தலைவி தங்கியுள்ளாள் - என்று தலைவன் பாங்கற்கு இயல் இடம் கூறியவாறு.

17. சுழிகுளம்

     சுழிகுளம் என்பது ஒரு செய்யுளை எவ்வெட்டெழுத்தாக நாலடியும் நான்குவரி
 எழுதி, மேல் நின்று கீழ் இழிந்தும் கீழ் நின்று மேல் ஏறியும் முடிய உச்சரித்தாலும்,
 அவ்வரி நான்குமேயாய் அச்செய்யுள் தானே முற்றுப் பெறுவது.

    ["செழித்தெழு நீர்குளத் தினுட்செறிந் தகைத்கொடு
     சுழித்தடங் குவபோன்று அடக்குதல் சுழிகுளம்"              - மா. 295] 

     வரலாறு :

    "கவிமுதி யார்பாவே
     விலையரு மாநற்பா
     முயல்வ துறுநர்
     திருவழிந்து மாயா"

 என வரும்.

     [கவிகளில் முதிர்ந்தார் பாடும் பாடலே விலையிடுதற்கு அரிய சிறந்த கவியாம்.
 இடைவிடாது முயல்பவர் செல்வங்கள் அழிந்தும் அவை நீங்கா.]

18. சருப்பதோபத்திரம்

     சருப்பதோபத்திரம் என்பது ஒரு நிரை எவ்வெட்டாக அறுபத்து நான்கு அறை
 கீறி ஓரடி எவ்வெட்டெழுத்தாக நான்கடியான் ஒரு செய்யுள் பாடி அதனை

     51-52