406

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 99

    "மொழிந்ததை மொழிதல் மாறுபடு பொருள் மொழி
     பிரிபொருள் சொற்றொடர் கவூர்படு பொருள்மொழி
     நிரல்நிறை வழுவே யதிவழுச் சொல்வழுச்
     சந்தி வழுவொடு செய்யுள் வழுவென
     வந்த ஒன்பதும்ஒரு வழிக்கடி வழுவே."                      - மா. 300 

    "உலகுஇடம் காலம் கலையே நியாயம்
     ஆகம மலைவென்று ஆறுஒரு வகையுள."                    - மா. 319 

     பிறன்கோள் மறுத்தல்

 692. மேற்கோள் ஏது எடுத்துக்காட்டு எனமூன்று
     சாற்றுப ; அவற்றின் பால்படு வழுநிலை
     நிரம்ப உணர்த்த வரம்பில ஆகும்.

     இது பிறன்கோள் கூறி மறுக்கின்றது.

     இ-ள் : மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் எனவும் மூன்று சொல்லுவர்
 ஆசிரியர். அவற்றின் பகுதிக்கண்ணவாய் வரும் வழுநிலையை ஈண்டு முற்ற உணர்த்த
 அளவின்றிப் பெருகும் என்றவாறு.

     எனவே, ஈண்டு அவற்றை உணர்த்திலம் என மறத்தாயிற்று. அவை நியாயநூல்
 ஆராய்ச்சியின்பால் படுவன ஆதலானும், மதங்கள்தோறும் வேறுபட்டு நிற்றலானும்,
 இன்பத்தை உரைக்கும் வரையறை உடையதாண அணி இலக்கணத்தின்
 பிறிதுபடுதலானும் அவற்றை வேண்டிற்றிலம் என்க.                         (73)