408

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 101, 102

    ["உரியசொல் பலபொருள் ஒன்றின்ஒன் றாதன
     பிரிபொருள் சொற்றொடர் எனும்பெயர் உடைத்தே."           - மா. 205 

    "அதுவே,

    "கள்ளுண் மாந்தர்பித் தரிற்கடி வரையில."                        - 206 

    "பித்த மயக்கினும் பெருங்குடி வெறியினும்
     வழுவின் றென்மனார் மறைஉயர்ந் தோரே."                        31]

     வரலாறு :

    "கொண்டல் மிசைமுழங்கக் கோபம் பரந்தனவால்,
     தெண்திரைநீர் எல்லாம் திருமுனியே-உண்டுஉழிழ்ந்தான்;
     வஞ்சியார் கோமான் வரவு ஒழிக ; மற்றுஇவள்ஓர்
     பஞ்சிஆர் செஞ்சீ றடி ;

 எனவும்,

    "காமன் உருவம் கரந்தேன்யான் ; காங்கேயன்
     வீமன் எதிரே வலங்குமே ; -- தாமரைமேல்
     பால்பொழியும் இவ்வூர்ப் பனை"

.

 எனவும் முறையே அவ்வாறாதல் கண்டுகொள்க. பித்தினான் மயங்கிக் கூறுதல்
 வந்துழிக் காண்க.

     "வரைவின்று" என்னாது "கடிவரையின்று" என்றதனால், பிள்ளைத்தன்மையான்
 மொழியினும் அமையும். அதுவும் வந்துழிக் காண்க. "அவற்றுள்" என்பதனை
 இப்பொருண்மை அதிகாரம்முற்றும் அளவும் உய்த்து உரைக்க. (74)