410

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி. 103, 104.

    ["பகர்ந்தமுன் மொழிப்பொரு ளொடுமுரண் பான்மையின்
     புகன்றிடு மதுவே மாறுபடு பொருள்மொழி."                  - மா. 303 

    "அச்சமும் காமமும் அகமிகின் உரித்தே."                    - மா. 304] 

     வரலாறு :

    "மின்ஆர் மணிப்பைம்பூண் வேந்தே ! நினக்குஉலகில்
     இன்னா தவர்யாரும் இன்மையால், - ஒன்னார்
     குலம்முழுதும் கூற்றம் கொளவெகுண்டு நீயே,
     தலம்முழுதும் தாங்கல் தகும்"

 எனவும்,

    "என்னோடு இகல்புரியப் பஞ்சவர்கள் அஞ்சாரோ?
     மின்அனைய பாஞ்சாலி யைவிடேன் ; - அன்னோ !
     மிகல்புரியும் கூற்றுஅனைய வீமன் எதிர்நின்று,
     இகல் புரிய ஆற்றுவனே யான் !"

 எனவும் முறையே காண்க. ஏனைய வந்துழிக் காண்க. (75)

     [ஒளிவீசும் மணிகள் வைத்து இழைக்கப்பட்ட பசும் பொன்னாலாகிய
 அணிகலன்களை உடைய அரசே ! உனக்கு இவ்வுலகில் பகைவர் யாரும் இல்லாத
 காரணத்தால், உன் பகைவருடைய கூட்டம் முழுதையும் எமன் கொள்ளுமாறு
 அவர்களை நீ கோபித்து அழித்து உலகம் முழுவதையும் நீயே காத்தலே ஏற்றது -
 என்ற இப்பாடலில் முன்னர் அரசனுக்குப் பகைவர் இல்லை என்று கூறி, பின்,
 அவன் பகைவர்களை எல்லாம் வெகுண்டான் என்று கூறுவது மாறுபட்ட கருத்தாகி
 வழுவாதல் காண்க.

     காமம் மிக்க இடத்து, "என்னோடு போர் செய்யப் பாண்டவர் எவரும்
 அஞ்சமாட்டார்களா? மின்னலைப் போன்ற ஒளியுடைய திரௌபதியை நான்
 என்னைவிடுத்துச் செல்லுமாறு