அணியியல் - மொழிந்தது மொழிதல்

411 

 விடமாட்டேன். ஐயோ ! மாறுபாடு செய்யும் எமனை ஒத்த வீமனுடைய எதிரே
 நின்று போர் புரிய வல்லேனோ நான்?" என்று இவ்வாறு முதலில் ஐவரையும்
 வெல்லும் ஆற்றலுடையவனாகக் கூறி, பின் அவ்வைவருள் ஒருவனான வீமனுக்கே
 அஞ்சும் திறம் உரைப்பது முன்னுக்குப் பின் முரணாயினும், காமம் மிக்கவன்
 கூற்றாகக் கோடலின் அமையும் என்பது.]                                  75

மொழிந்தது மொழிதலும் அமைதியும்

 695. மொழிந்தது மொழிதல், கூறியது கூறி
     வேறுபட ஒருபொருள் விளக்கா தாகும் ;
     விரைவினும் சிறப்பினும் வரைவுஇன்று அதுவே.

     இதுவும் அது.

     இ-ள் : மொழிந்தது மொழிதல் என்பது, முற் கூறியதனை மீட்டும் கூறி
 அதனால் வேறுபட ஒரு பொருளை விளக்காதாகும். அதுவே, விரைவின் கண்ணும்
 சிறப்பின் கண்ணும் கடியப்படாது என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 105, 106

    ["அவற்றுள்,
     பழியற ஒருபொருள் மொழிபரி யாய
     மொழியொடு தொடர்வது மொழிந்ததை மொழிதல்."           - மா. 302 

    "அதுவே,
     சிறப்பினும் விரைவினும் சிதைவின் றாகும்."                 - மா. 303] 

     வரலாறு :

    "அங்கம் இலாத அநங்கன் அமர்புரியும்
     வெங்கணையும் காக்குங்கொல்? வேல்வேந்நர் -- தங்கோன்,
     நிலைஆர்த் தொடைதந்தோன், நேரிழைக்காய் முன்ஓர்
     மலையால் கடல்கடைந்த மால்"

 எனவும்,