அணியியல் - கவர்படு பொருள்மொழி

413 

     "தீத்தீத்தீ" என்னும் அடுக்கும் தெலுங்குத்தொடரே என்பது இப்போது
 தெரியவருகின்றது. "தீ" என்பது அம்மொழியுள் வழிவிடு ஒதுங்கு என்ற பொருளின்
 வழங்குவதாம். சோழ வீரரைக் கண்டதும், வடநாடர் "ஒதுங்கு ஒதுங்கு" என்று
 கூறிக்கொண்டு போக்கிடம்பெறாது சோர்வர் என்பது இப்பாடற் கருத்தாமென்க.
 "நெருப்பு நெருப்பு" என்ற அடுக்குதற்குரிய முன்னிகழ்ச்சியொன்றும் பாட்டில்
 குறிப்பிடப்பெறாமையால், இப்பொருள் கூறுதலே தக்கதாதல் கண்டுகொள்க. பக். 425]

கவர்படு பொருள்மொழியும் அமைதியும்

 696. ஒருபொருள் துணிய உரைக்க உறுசொல்
     ஒருபொருட்டு இயைவது கவர்படு பொருள்மொழி;
     வழுப்படல் இல்வழி வரைவுஇன்ற அதுவே.
     இதுவும் அது.

     இ-ள் : ஒரு பொருளைத் தெளிவுற உணர்த்துதற்குப் பொருந்திய சொல்
 அதனை ஐயுறம்படி பல பொருள் மேலும் நிற்பது கவர்படு பொருள்மொழியாம்.
 அதுவே, வழுஇல்லாத இடத்துப் பொதுப்பட உரைப்பினும் நீக்குதல் இன்று
 என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 107, 108.

    "உவர்ப்பறத் துணிந்தொரு பொருள்குறித் துரைத்தசொல்
     கவர்த்துஇரு பொருட்குறல் கவர்படு பொருள்மொழி."          - மா. 307 

    "வசைபொருந் தாவழி வரினது மரபே."                       - மா. 308 

     வரலாறு :

    "புயலே புறம்பொதிந்து, பூந்தாது ஒழுக்கி,
     மயலே கடவுளர்க்கு வாய்த்துச் -- செயலை
     எரிமருவு பூந்துணர்த்தாய், யாவரும் ஊடாடார்,
     அரிமருவும் சோலை அகம்"

 எனவும்,