ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 109, 110.
["முன்னர்எண் ணிற்கம் மொழிமாற் றிக்கொளப்
பின்னர்எண் ணிரல்பிறழ் வதுநிரல் நிரைவழு." - மா. 309
"உய்த்துண ரிடமெனில் உரிமை யுடைத்தே." - மா. 310]
வரலாறு :
"தெற்கும் குடக்கும் வடக்கும் குணக்குமே
நிற்கும் திறத்துஉலகை நீடுஅளிக்கும் -- பொற்பினார்,
ஈரெண் கலையோன், வருணன், இரவி,யமன்,
யாரும் புகழ்இயல்பி னார்"
எனவும்,
"குடபால், வடபால், குணபால்,தெண் பால்என்று
அடைவே திசைநான்கு ; அவற்றுள், -- இடைஇரண்டும்
நன்மைபுரி வோர்நயந்து நோக்குப ; ஏனைய
அன்மை புரிவோர்க்கே யாம்"
எனவும் முறையே காண்க.
[எண் திக்குப் பாலகர்களின் நிரல் பின் வருமாறு :
கிழக்கு -- சூரியன், இந்திரன்
தென்கிழக்கு -- அக்கினி
தெற்கு -- இயமன்
தென்மேற்கு -- நிருதி
மேற்கு -- வருணன்
வடமேற்கு -- வாயு
வடக்கு -- சந்திரன், குபேரன்
வடகிழக்கு -- ஈசனன்
இம்முறை இப்பாடலில் கொள்ளப்பட்டது.
|
|
|