அணியியல் - சொல் வழு

417 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 111, 112

    ["திணைமுத லாகச் செப்பிய வழுவின்ஒன்று
     அணைதரு மாயினும் அதுசொல் வழுவே."                    - மா. 313 

     மரூஉக்கட் டுரைச்சொலின் வழுவின் றதுவே."                - மா. 314] 

     வரலாறு :

    "யாவகைய தாயர்க்கும் எந்தைக்கும் எங்களுக்கும்
     ஆவி இவளே ; அனைவேமும், -- கோவே !
     நுனக்குஅபயம் ; இந்த நுழைமருங்குல் மாதர்
     தனக்கு இடர்ஒன்று இல்லாமல் தாங்கு"

 எனவும்,

    "யாவர் அறிவார் இவர்ஒருவர், இக்குறிஞ்சிக்
     காவலரே? விஞ்சையர்தர் காவரோ? - பாவாய் !
     அருமந்தன் னார்நம் அகன்புனம்விட்டு ஏகார்,
     தெருமந்து உழலும் திறம்"

 எனவும் முறையே காண்க.                                            (79)

     [செவிலி திருமணத்தின் பின் தலைவியைத் தலைவனோடு அனுப்பும்போது,
 அவளை அவனிடம் ஒம்படை சாற்றும் அளவில், "ஆட்டுவான் ஊட்டுவாள் ஓல்
 உறுத்துவாள் நொடிபயிற்றுவாள் கைத்தாய் என்ற எவ்வகைப்பட்ட தாய்மாக்கும்
 எங்களுக்கும் எந்தை என்னையருக்கும் இவள் உயிர்போல்வாள். நாங்கள் எல்லோரும்
 இவளை உன்னிடம் "பாதுகாப்பாயாக" என்று ஒப்படைக்கின்றோம். இந் நங்கைக்கு
 இடர் ஏதும் வாராமல் தாங்கு" - என்ற இப்பாடலில், யாவகையதாயர் என்பது வழு ;
 எவ்வகைய தாயர் என்பதே வழாநிலை. மேலும், "தாயர்க்கும்" என்று கூறிய தாய்
 மீண்டும் "எங்களுக்கும்" என்று கூறியது வழு. நினக்கு என்ற சொல்லை நுனக்கு
 என்று சொற்றதும் வழு.

    53-54