[தலைவனை இரவுக்குறி வரல் விலக்கும் தோழி, ஐயா ! மலையின் நாற்புறமும்
சுற்றித் திரிகின்ற யாளி பெரிய யானைகளுடைய கொம்புகளைப் பறித்து அவற்றின்
ஊனினை உண்டு திரியும் இயல்பிற்றாய காடு கடந்து வருதற்கு அரிய இயல்பை
உடையது ; மேலும், அதன்கண் நள்ளிரவில் இருளில் வாராதே ; அதனால் பெரிய
ஆபத்து ஏற்படும்" - என்று கூறும் இப்பபடலில் "காடரி தாம்" என்று சந்தி
சேரவேண்டியதனைக் காடு அரிதாம் என்று பிரித்துச் செய்யுளமைத்தமை வழுவாமாறு
காண்க. காடரிதாம் என்று புணர்ந்தவழி, தனிச்சீர் "கா" என்ற ஒரே ஓரசைச்
சீராய் வழுப்படுதல் நோக்குக.
"தன்னை விரும்பி வாழ்பவரிடத்தே வறுமை இருளை நீக்கிச் செந்தாமரையில்
வீற்றிருக்கும் திருமகள் அரசனுடைய தோள்களை விட்டு நீங்காள் ; அவனுடைய
அழகிய தலை திருமாலினுடைய திருவடிகளைப் பணிதலை நீக்காது; நீலமேனியளாகிய
துர்க்டிக அவன் வேலினுடைய நுனியை விட்டு நீங்காள் ; அவன் கைகள் ஈகையை
நீங்கா" - என்ற இப்பாடலில் பா என்பதற்குரிய ஒசைக்கண் தவறு வருதல் கூடாது
என்ற கருத்தான் பொருள் நோக்கிச் சீர்களை "மேவி வாழ்வார்" "தேவி நீங்காள்,
என்றாற் போல அமைக்காது, ஓசையை நோக்கி வகையுளியாக "மேவி வாழ் வார்மேல்"
எனவும், "தேவிநீங் காள்தன்" எனவும் அமைத்தமை அமைதி ஆதல் காண்க.] 80