42

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

விளக்கம்

     காப்பியம் என்பதனைக் காரணப் பெயராக்காமல் காரண இடுகுறியாகக் கொள்க
 என்பது. பங்கயம் - பங்கஜம்; பங்கம் - சேறு; ஜம் - தோன்றுவது; காரணம் பற்றி
 நோக்கச் சேற்றுள் தோன்றும் எல்லாவற்றையும், அச்சொல் குறித்தல் வேண்டும்;
 ஆனால் இடுகுறியாய் அச்சொல் தாமரையையே குறித்தல் காண்க. இதுபற்றியன்றே
 பெயர்களை இடுகுறி, காரணம், காரண இடுகுறி என்ற மூன்று
 பகுப்பினவாகச் சான்றோர் கொண்டவாறும் அறிக.

     காப்பியங்களுள் முத்தகச் செய்யுள் மிகுதியாகவும், குளகச் செய்யுள் அதனினும்
 குறைந்தும், கூற்றுப்பகுதி, வருணைப்பகுதி இவைபற்றி அமையும் தொகைநிலைச்
 செய்யுள் இவ்விரண்டினும் குறைந்தும் வரும் என்பது கொள்க.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 7

    "பெருங்காப் பியங்காப் பியமெனும் பெற்றித்தால்
     சுருங்காய் பொருட்டொடரும் சொல்லின் - பொருந்தவற்றுள்
     ஒன்றும் பலவும் பொருளில் குறைவுறுமேல்
     என்றும் அதுகாப் பியம்"

- மா. 71 

    "காப்பியம் பெருங்காப் பியமென இருவகைப்
     படும்பொருட் டொடர்நிலை பகருங் காலே"

- மு. வீ. செய்யுளணி 8 

பெருங்காப்பியம் - இலக்கணம்

 628. பெருங்காப் பியநிலை பேசுங் காலை,
      வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின்ஒன்று
      ஏற்புஉடைத் தாக முன்வர இயன்று