அணியியல் - செய்யுள் வழு

421 

    "ஏரி இரண்டும் சிறகா எயில்வயிறாக்
     காருடைய பீலி கடிகாவா -- நீர்வண்ணன்
     அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே,
     பொற்றேரான் கச்சிப் புரம்"

 எனவும்,

    "கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க,
     ஓண்செங் குருதியுள், ஓஓ, கிடப்பதே ! - கெண்டிக்
     கெழுதகைமை இல்லேன், கிளர்ந்துஊடிப் பன்னாள்
     அமுதகண் ணீர், துடைத்த கை"                                  (81) 

     [ஆசை வருத்தத்தைத் தர அதனால் வருந்தும் தலைவிக்கு உலகை
 வனப்புறுத்தும் புகழை உடைய சோழன் அணிந்துள்ள மாலைகளால் அன்றி மன்மதன்
 மலர் அம்புகளால் செய்யும் போர்த் துன்பம் நீங்காது - என்ற இப்பாடலில்,
 முதலிரண்டடியும் ஆசிரியமாய்ப் பின் இரண்டடியும் வெண்பாவாய் வருதலின்
 செய்யுள் வழுவாம். மாறி வந்திருப்பின் மருட்பாவாய் வழா நிலையாகி இருக்கும்.
 ("ஏரி இரண்டும்" என்ற வழா நிலைப் பாடல் ஈண்டு ஏடெழுதுவோரால்
 பொருத்தமின்றி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது என்பதே எளியேன் கருத்தாகும்.]

     மனம் வேறுபட்டு, தன்னுடைய தொடர்பில்லாத நான் தரையில் கிடந்து ஊடவும்
 பல நாறும் நான் உகுத்த கண்ணீரைத் துடைத்த என் தலைவனுடைய கைகள்,
 வாளைப் பற்றிக் கொண்டு அணிந்துள்ள கடகத்து மணி ஒளிவீச ஒள்ளிய சிவந்த
 குருதியில் கிடக்கின்றதே - என்றவாறு. இது பத்தினிப்பாட்டு என்று யாப்பருங்கல
 விருத்தி கூறும்.

     இவ்வெண்பாப் பாடலில் ஈற்றடி நீங்கலான ஏனைய அடிகள் நான்கே சீர்களை
 உடையவாதல் வேண்டும் என்ற வெண்பா இலக்கண வரையறைக்கு மாறாக,
 இரண்டாம் அடியில் ஐந்து சீர்கள் வந்துள்ளன. இச்சான்றோர் பாடல்
 வழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.]                                    81