422

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

சந்திவழுவும் அமைதியும்

 701. சந்தி வழுவே எழுத்திலக் கணத்துச்
     சந்தியொடு மருவாத் தன்மையது ; அதுவே
     இரண்டாம் வேற்றுமைக்கு எதிர்மறுத்து வருமே.

 இதுவும் அது.

     இ-ள் : சந்தி வழு என்று சொல்லப்படுவது, எழுத்திலக்கணத்தில் கூறிய
 சந்தியோடு மாறுபட்ட இயல்பினை உடைத்தாம். அதுவே, இரண்டாம் வேற்றுமைப்
 புணர்ச்சிக்கண் அவ்வாறு மாறுபட்டுவரும் என்றவாறு.

முழுதும் - தண்டி 117, 118

முழுதும் - தண்டி 4.

    "ஆற்றல்சால் எழுத்தினுள் அமைத்தசந் தியின்வகை
     மாற்றம் துறவழு வுதல்சந்தி வழுவே."                         - ம. 315 

    "ஐயென் உருபு தொனிக்அஃது இயல்பாத்."                        - 316 

     வரலாறு :

    "உன்புஊடு உருவ இனைவேன் மனம்கலக்கும்
     பொன்பூண் சுமந்த புணர்மலையாள் -- மின்பூண்
     நுடங்குஇடைக்குக் காவலாய், நோக்கம் கவரும்,
     படம்கிடக்கும் அல்குல் பரப்பு"

 எனவும்,

    "இரவி துணைத்தாள் இகல்வேந்தர் சென்னி
     விரவு மலர்பொழியும் ; மேவா -- அரைசுஇரிய
     மின்பொழியும் செவ்வேல் ; வெறியேன் மனம்கவரப்
     பொன்பொழியும், செய்கைப் புயல்"

 எனவும் முறையே காண்க.                                             (82)