[உள்ளே உள்ள எலும்புகளும் உருகுமாறு வருந்தும் என்னுடைய மனத்தைக்
கலங்கச் செய்யும் பொன் ஆபரணங்களை அணிந்த இணையான நகில்களை உடைய
தலைவியின் மின்னலைப் போல அசையும் நுண்ணிய இடைக்குக் காவலாகிப் படம்
போன்ற அல்குல்பரப்பு என் நோக்கத்தைக் கவர்கிறது -- என்ற பாடலில்,
"பொற்பூண்" என்று சந்தி சேர்ந்து அமையவேண்டிய தொடர் "பொன்பூண்"
என்றிருத்தல் வழுவாகும்.
சோழனுடைய இரண்டு அடிகளும் மாறுபட்ட மன்னர்களுடைய தலையில்
சூடப்பட்ட மலர்கள் பொழியப்பெறும். பகைமன்னர் தோற்றோடச் சோழனுடைய
சிவந்த வேல் ஒளி வீசும். வெறுவியேனது மனம் விரும்பும் பரிசாகக் கொண்டு
செல்லுமாறு அவனுடைய சிவந்த கைகளாகிய மேகம் பொன்னைச் சொரியும் என்ற
பாடலில்-இரண்டாம் வேற்றமைத் தொகைநிலைத் தொடர்கள் பொது விதிக்கு மாறான
புணர்ச்சி உடையவாதலும் உண்டு ஆதலின், "மலர் பொழியும்" "மின் பொழியும்"
"பொன் பொழியும்" என இயல்பாகவே புணர்ந்தமை வழாநிலை ஆதல் காண்க.] 82