மலை என்பது இமயம் பொதியம் முதலாயின. யாறு கங்கை கங்கை காவிரி முதலாயின. நாடு பதினெண்பாடைக்கும் உரிய நிலங்கள்.
ஒத்த நூற்பாக்கள்
(முதலடி) தண்டி 119.
"உலகிடங் காலம் கலையே நியாயம்
ஆகம மலைவென்று ஆறுஒரு வகைஉள." - மா. 319
"ஒழுக்க நடையே உலகம தாகும்." - 320
"இடமது மலைநாடு யாறென மூன்றே." - 321
"சிறுபொழு தொடுபெரும் பொழுதெனக் காலம்
அறுவகைத் தாமென அறைந்தனர் புலவர்." - 322
"பொருளும்இன் பமும்புணர் பொருட்டா கியநூல்
அருளுமெண் ணான்கிரட் டியகலை அதுவே." - 323
"அளவையின் ஆயபல் பொருட்கமை வினைத்திறம்
உளமுற மதித்துரைப் பதுவே நியாயம்." - 324
"அறம்பகர் முனுமத லாயின ஆகமம்.." - 325
வரலாறு :
"தென்மலையின் மான்மதமும் சாமரையும், காமருசீர்ப்
பொன்மலையின் சந்தனமும் ஆரமும், - பன்முறையும்
பொன்னி வளநாடன் முன்றில் பொதுளுமே,
மன்னர் திறைகொணர வந்து"
எனவும்,
"தண்பொருநைச் செங்கனகம், மாதங் கிரித்தரளம்,
வண்கலிங்கம் தந்த வயப்புரவி, -- பண்பு
மருவும் யவனத்து மால்யானை, சென்னி
பொருநருக்கு வீசும் பொருள்"
எனவும் மாலை இடமலைவும், ஆற்று இடமலைவும், நாட்டு இடமலைவும் முறையேகாண்க.
|
|
|