இதனுள், நின்ற நரம்பிற்கு ஐந்தாவது கிளை ஆதலால் அதனைப் பகை என்றும் ஆறாவது பகை ஆதலால் அதனைக் கிளை என்றும், நான்காவது நட்பு ஆதலால் அதனை எட்டாவதன் பெயராகிய இணை என்றும் சொன்னமையால் கலை கலைவு ஆயிற்று. (85)
[தலைவி தன் உயிர்த்துணைவன் புகழைத் தொடுத்துத் தான்யாழ் எழுவினாள் என்று கூறும் இடத்துக் கிளை நரம்பைப் பகை என்றும், பகை நரம்பைக் கிளை என்றும், நட்பு நரம்பை இணை என்றும் கூறுதல் கலைமலைவு ஆமாறு காண்க.] 85