அணியியல் - அறுவகை மலைவு அமைதி

431 

     [பிதிரர் விருந்தினர் தேவர் உறவினர் தாம் என்ற ஐந்து வகையினரையும்,
 முக்கோலும் காவிஆடையும் கொண்ட சான்றோராகிய துறவியர், தம் செல்வத்தைக்
 கொண்டு ஒம்புவார்கள் - என்ற இப்பாடலில், இல்லறத்தார் செயல்களாகிய ஐம்புலத்து
 ஆறு ஓம்புதலைத் துறவிகள் செயலாகக் கூறிய ஆகமவழு அமைந்துள்ளமை காண்க.]

88 

அறுவகை மலைவும் ஆமிடம்

 708. கூறிய நெறியின் அறுவகை மலைவும்
     நாடக வழக்கினுள் நாட்டுதற்க உரிய.

     இது மேற்கூறிய மலைவு ஆறனையும் இன்னுழி ஆம் என்கின்றது,

     இ-ள் : இடம் முதலாக ஆகமம் ஈறாக இங்ஙனம் கூறிய முறையமையான் வரும்
 அறுவகை மலைவும், நாடக வழக்கினிடத்துச் சொல்லுதற்கு உரியனவாம் என்றவாறு.

     ஈண்டு நாடக வழக்கு என்றது, இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
 புனைந்துரைவகையாற் கூறுதலாம் ; எனவே, அவ்வாறு புகழ்ச்சி இடத்து நீக்கப்படா
 அலங்காரமாயே வரும் என்பதாம்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 125

    "நாவலர் நாடக வழக்கினுள் நயந்து
     மூவிரு மலைவும் மொழிவதற் குரிய."                        - மா. 326 

     அவை வருமாறு :

    "மரகத் சோதியுடன் மாணிக்கச் சோதி
     இருமருங்கும் சேர்ந்து,அரிவை எம்மான் -- உருவம்