மலைக்கும், அகில்சுமந்து ஆரத்து வான்கோடு
அலைத்து வரும்பொன்னி ஆறு."
இதனுள், பிற நாட்டிற்கும் பிறமலைக்கும் உரிய மரகதமும் மாணிக்கமும் அகிலும் சந்தனமும் காவிரி அலைத்துவரும் என்றமையால், இடமலைவாய்ப் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று.
[பசிய மரகதச்சோதியுடன் சிவந்த மாணிக்கச்சோதி இருபாலும் சேர்தலால், சுமந்து சந்தனக் கிளைகளை அடித்துவரும் காவிரி யாறு பார்வதி பாகனான சிவபெருமானடைய உருவத்தை ஒத்திருக்கிறது.]
"மண்டபத்து மாணிக்கச் சோதியான், வாவிவாய்ப்
புண்டரிகம் மாலைப் பொழுதுஅலரும்; -- தண்தரளத்
தாமம் சொரியும் தலைநிவலான், மெல்ஆம்பல்
பூமலரும், காலைப் பொழுது."
இதனுள், காலைமலரும் கமலம் மாலை மலர்வதாகவும், மாலை மலரும் குமுதம் காலை மலர்வதாகவும் கூறினமையான், காலைமலைவாய்ப் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று.
[மண்டபத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களின் சோதியால் குளங்களில் தாமரை மொட்டுக்கள் மாலையில் மலரும்; தண்ணிய முத்துமாலை சொரியும் சிறந்த நிலவால் ஆம்பற் பூக்கள் காலையில் மலரும் - என்ற இப்பாடலில், தாமலை மாலையிலும், ஆம்பல் காலையிலும் மலர்வதாகிய காலவழு அமைந்திருத்தல் காண்க.]
"வஞ்சியர்கோன் வஞ்சி மதவேழ வார்மதத்தால்
வெஞ்சுடர்சூழ் வேனில் வெயில்மறைப்ப, -- வஞ்சத் |
|
|