அணியியல் - அறுவகை மலைவு

433 

     தளவுஅரும்ப, பூங்கொன்றைத் தண்கொம்பு அரும்ப,
     களிமயில்கள் ஆர்த்துஇலகும் காடு."

 இதனுள், கார்க்கு உரியன வேனிற்குப் புணர்த்தமையான் காலமலைவாய்ப்
 புகழ்ச்சியிடத்து அலங்காரமாயிற்று.

     [கருவூர்க்கும் மன்னனாகிய சோழனுடைய வஞ்சிநகரத்து மதயானைகளுடைய
 மிக்க மதத்தால் கதிரவன் தெறும் வேனில் வெயில் மறைய, வஞ்சனையாக முல்லை
 அரும்புவிட, கொன்றை மரக்கிளைகள் அரும்புவி, காட்டில் மயில்கள் ஆரவாரித்து
 ஆடும் - என்ற இப்பாடலில் கார்கால வருணனை வேனிற்குக் கூறப்பட்டவாறு.]

    "கூடம் விரவிக் குறைநிலத்தா தத்தியன்ற
     பாடல் அமிழ்தம் பருகினான் ; -- ஆடுகின்ற
     ஊசல் அயல்தோன்றி, ஒள்ளிழைக்க நாண்அளித்த
     ஆசுஇல் வடிவே லவன்."

     இதனுள், கூடம் என்பது ஆறாம் நரம்பாகிய பகை நரம்பு. அதனோடு கூடிக்
 குறைநிலத் தானத்து இயன்றதனைப் பாடல் அமிழ்தம் எனக் கலைமலைவாய், ஊசல்
 ஊர்ந்து ஆடிப் பாடுகின்ற தலைமகள் அயல் தோன்றிய தலைமகனது தோற்றம்
 அவட்கு நாண் பயந்தமையால், பாடல் பிறழ்ந்தும் அவற்கு இன்பம் பயத்தலான்
 புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று.

     [ஆடுகின்ற ஊஞ்சலுக்குப் பக்கத்தில் வந்து தலைவி வெட்கம் உண்டாகும்படி
 செய்த குற்றமற்ற வெள்ளிய வேலை உடைய தலைவன் பகைநரம்போடு கூடிக்
 குறைந்த நிலமாகிய தானத்தில் மிழற்றப்பட்ட பாடலை அமுதமாகப் பருகினான் -
 என்ற இப்பாடலில், தலைவி தலைவனைத் திடீரென்று கண்ட நாணத்தால்     55-56