இதனுள், கதிரோற்குக் கன்னனைப் பயந்த பின்னவரும் கன்னி ஆயினாள் என்றும்,
பின்னர் மூவர்க்கும் மூவரைப் பயந்தும் கற்புடைமையால் மால் வணங்கினன்
என்றும் ஆகமமலைவாய், புகழ்ச்சியிடத்து அலங்காரமாயிற்று. பிறவும் அன்ன.
[சூரியனுக்குக் கர்ணனை மகனாகப் பெற்றும், பின்னும் கன்னியாகி அதன்பின்னும்
தருமன் வீமன் அருச்சுனன் என்ற மூவரையும் மூவருக்குப் பெற்றளித்த பெண்ணைத்
தலைமை பொருந்திய கற்பினாளாக, தன் இளமைக் காலத்தில் கோவர்த்தன
மலையைக் குடையாகப் பிடித்து இந்திரன் ஏவிய மழையைத் தடுத்த கண்ணனாகிய
திருமால் வணங்கினான்.
இஃது ஆகம மலைவாமல் உரையிற் காண்க.]
இவை எல்லாம் புனைந்துரையாய் அலங்காரம் ஆமாறு பொருள்தொடர் நிலைச்
செய்யுளுள் கண்டுகொள்க. (89)