அணியியல் - புறனடை

437 

 சொல்லினானும் எழுத்தினானும் கூறி முடிவுபெற வந்த மூவகை மடக்கு அலங்காரமும்,
 கோமூத்திரி முதலாகக் குறைபாடு இல்லாத இலக்கணத்தில் பிழைப்பு இன்றி வந்த
 மிறைக்கவி இலங்காரம் இருபதும், இவ்வாறு கூறுதல் வழுவும் ; மலைவும் ஆம்
 என்றும் அவற்றை இவ்வாறு பொருந்தக் கூறுதல் வழக்கு என்றும் சொல்லப்பட்ட
 பதினைந்து வேறுபாடும் உள்ளிட்டன கூறப்பட்டனவாம். இங்ஙனம் கூறிய நெறியின்
 ஒழிந்து வருவனவற்றையும் கொள்ளுதல் நிரம்பிய அறிவினை உடைய சான்றோர்க்கு
 முறைமையாம் என்றவாறு.

     முற்கூறுவதாய எழுத்துமடக்கைப் பிற்கூறியது என்னை எனின், அடிமடக்கும்
 சொல்மடக்கும் எழுத்தின் கூட்டம் என்பது அறிவித்தற்கும், ஓர் எழுத்தானும் ஓர்
 இனத்தானும் வருவனவும் அப்பாற்படும் என்பது அறிவித்தற்கும், கோமூத்திரி
 முதலாகிய மிறைக்கவியும் ஆராயுங்கால் பெரும்பாலும் எழுத்தின் மடக்கின்பாற்படும்
 என்பது அறிவித்தற்கும் எனக் கொள்க. முன்னோர் நூலுள் கோமூத்திரியும்
 மாலைமாற்றும் சுழி குளமும் சருப்பதோபத்திரமும் ஆகிய நான்குமே மிறைக்கவி
 என்க கூறப்படுதலான் இவர் மிறைக்கவி இருபது எனக் கூறப்படுதலான் இவர்
 மிறைக்கவி இருபது என்றல் மலைவாம்பிற எனின், ஆகாது ; ஒன்றினமுடித்தல்
 தன்னினம் முடித்தல் என்பதனானும்,

    "இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
     திரிவுவேறு உடையது புடைநூல் ஆகும்."                  - இ. வி. 902 

 என்பதனானும் என்க.                                                 90