அணியியல் - பொது

45 

     [வீரசோழியம் 106-ஆம் காரிகை உரையுள் சந்தியின் உறுப்புக்கள் ஐந்தும் முகம்,
 பயிர்முகம், கருப்பம், விமரிசம், நிருவாணம் என்ற பெயர்களோடு ஏறத்தாழ இவ்வாறே
 விளக்கப்பட்டுள்ளன

     இந்நூலார் குறிப்பிடும் விளைத்தலில் பயிர்முகம் கருப்பம் விமரிசம் என்ற
 மூன்றும் அடங்கும் என்க.]

     சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் சந்தியுறுப்பு ஐந்தனையும் இவ்வாறு
 விளக்கியுள்ளார். இதனையே விபுலா நந்தரும் மதங்க சூளாமணியின் தொடக்கத்தில்
 கூறியுள்ளார்.

    "இடைப் பொருளுடனே எடுத்த கதையின்
     தலைப்பொருள் சார்ந்து தழைத்து முதிர்வது
     நாட்டியக் கட்டுரைச் சந்தியாம் அதுதான்
     முகமே பிரதி முகமே கருப்பம்
     விளைவு துய்த்தலோடு ஐவகை யாகும்."                - நாடகவியல் 32 

    "எடுத்துரை கதைதான் இனிமையில் தொடங்கி
     உழவினால் சமைந்த பூழியுள் இடுவிதை
     முளைத்துத் தோன்றுதல் போல்வது முகமே".                       33 

    "முளைத்தல் முதலா இலையும் பெற்று
     நாற்றென நிற்பது பிரதி முகமே".                                  34 

    "நாற்று முதலாக் கருவு முதிர்ந்துழிக்
     களைபல செறியக் கட்டவை ஒழிதலும்
     பொருள்நனி பொதிந்து நிற்பது போல்வது
     கருப்பம் என்னக் கழறினர் பெரியோர்".                            35 

    "முற்றி நின்ற கதிர்திரண்டி டடுதலும்
     இலங்கும் கதிர்கறி விலங்கு கடிந்தபின்
     காய்த்துத் தாழ்வது போல்வது விளைவு".                           36 

    "காய்த்த கதிரினை அறுத்த நற்பொலி
     செய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வது
     போல்வது துய்த்தல் புகலுங் காலே".                               37 

     என்ற நாடகவியல் நூற்பாக்களையும் அவற்றின் உரைகளையும் நோக்குக.