46

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 8

    "வைத்த பெருங்காப் பியநிலையும் வாழ்த்தியல்பார்
     மெய்த்த அவையடக்கம் வீறுசால் - முத்திதரும்
     தெய்வ வணக்கமுடன் செய்பொருளும் முன்வரவாங்(கு)
     எய்த உரைப்பதுதான் ஏய்ந்து".                              - மா. 72 

    "தப்பிலா நாற்பொருளும் சாற்றுவதாய்த் தாரணிமேல்
     ஓப்பிலா தான்சரிதை உட்கொண்ட - செப்பமுற
     நன்மணம்இல் வாழ்க்கை நலம்புதல்வர்ப் பேறுபசும்
     பொன்மகுடம் வைத்தின் புறல்."                             - மா. 73 

    "அலையாழி மேன்மை அருட்புயலின் செய்கை
     மலையாறு நாடூரின் வண்மை - தொலையா
     இருசுடரின் தோற்றம் இருதுவளம் பானம்
     பொருபுனல்புக் காடல் பொழில்".                            - மா. 74 

    "மந்திரம்தூ தொற்றாடல் வாய்ந்த நிரைகோடல்
     புந்தியுறச் சேறல் புறத்திறுத்தல் - வெந்திறல்கூர்
     மிக்க இகல்வென்றி நிலையாமை யைமிகுத்தல்
     கைக்கிளைகள் கூறும் கடன்".                                - மா. 75 

    "படலம் இலம்பகம் பரிச்சேதம் காண்டம்
     தொடர்தொடர்பிற் பாடையுரை தோய்ந்துந் - திடமுறுச்சொல்
     மூன்றுட் கொளலாம் முறையில் சுவைவிறல்கூர்ந்(து)
     ஆன்றவர்மெய்ப் பான்புகல்வ தாம்".                         - மா. 75 

    "அறம்பொருள் இன்பம்வீடு ஆகிய நான்கும்
     புலம்படல் பெருங்காப் பியப்பொருள் ஆகும்".    - மு. வீ. செய்யுளணி 9 

                                                                    10