பொருள் புலப்படுப்பது அணி எனத்தம் மேற்கோள் கூறி, அப்பொருட்குச்
செய்யுள் இடம் ஆதலின் அதனைப் புலப்படுப்பதூஉம் அவ்வணிக்கு இயல்பு எனக்
கோடலின் அச்செய்யுளை ஒருவாற்றான் தொகுத்துக் கூறி, அணி இலக்கணம்
கூறுவான் தொடங்கியவற்றுள், இது நிறுத்தமுறையானே குண அணி இத்துணைத்து
என்கின்றது.
இ-ள் : வைதருப்பமும் கௌடமும் என மேற்கூறிய குண அணி
இருவகைப்படும் என்றவாறு.
வைதருப்பம் கௌடம் என்பன ஆகுபெயர், அவை போலும் பாக்களை
உணர்த்தலின். (14)