52

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 வைதருப்ப நெறிக்கு எடுத்துக்காட்டாக நளவெண்பாவையும், கௌட நெறிக்கு
 எடுத்துக்காட்டாக மூவருலாவையும், பாஞ்சால நெறிக்கு எடுத்துக்காட்டாக அரிச்சந்திர
 புராணத்தையும் கொள்ளலாம்.

ஒத்த நூற்பாக்கள்

    "மெய்பெறு மரபின் விரித்தசெய் யுட்கு
     வைதருப் பம்மே கௌடம்என் றாஅங்கு
     எய்திய நெறிதாம் இருவகைப் படுமே."                      -தண்டி. 13 

    "மன்னியபேர் யாப்பிற்கு வைதருப்பம் வான்கவுடம்
     பன்னியபாஞ் சாலம் எனப்பகுத்து - மின்னிடையாய்
     நன்னூல் முழுதுணர்ந்தோர் நாட்டகத்து நாட்டலுறீஇ
     முன்னூலுள் கண்டநெறி மூன்று"                              - மா. 77 

    "இழுமென் மொழியும் இனிய பொருளும்
     தழுவு மதுவை தருப்பம் - விழுமியாவம்
     சொற்கடினத் தோடும் பொருட்கடினந் தோய்ந்தரிதாய்க்
     கற்பனசா ருங்கவுடம் காண்"                                 - மா. 78 

    "இடையிட் டனவாகும் இன்சொல் பொருளால்
     தடையற் றொழுகுவ பாஞ்சாலம் - அடைவடைவே
     அக்கவிகள் பாடுமவர்க் கங்கவை பெயராய்
     மிக்குலகங் கூறும் விதித்து"                                 - மா. 79 

                                                                    14 

     வைதருப்பம் - பத்துவகை

 634. நெகிழ்இசை இன்றிய செறிவி னானும்
     பொருள்புலப் படுக்கும் தெளிவி னானும்
     விரவத் தொடுக்கும் சமநிலை யானும்
     சொல்லினும் பொருளினும் சுவைபடு நெறியான்
     நல்லன தொடுக்கும் இன்பத் தானும்
     வெறுத்திசை இல்லா ஒழுகுஇசை யானும்