அணியியல் - குணவணி

55 

ஒத்த நூற்பாக்கள்

    "செறிவே தெளிவே சமனிலை இன்பம்
     ஓழுகிசை உதாரம் உய்த்தலின் பொருண்மை
     காந்தம் வலியே சமாதி என்றாங்கு
     ஆய்ந்த ஈரைங் குணனும் உயிரா
     வாய்ந்த என்ப வைதருப் பம்மே"                          - தண்டி. 14 

    "செறிவுஎனப் படுவது நெகிழிசை இன்மை"                          - 16 

    "தெளிவுஎனப் படுவது பொருள்புலப் பாடே"                        - 17 

    "விரவத் தொடுப்பது சமநிலை யாகும்"                             - 18 

    "சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம்"                     - 19

    "ஒழுகிசை என்பது வெறுத்திசை யின்மை"                          - 20 

    "உதாரம் என்பது ஓதிய செய்யுளில்
     குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல்"                    - 21

    "கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்கு
     உரியசொல் லுடையது உய்த்தலில் பொருண்மை"                   - 22 

    "உலகொழுக்கு இறவாது உயர்புகழ் காந்தம்"                        - 23

    "வலிஎனப் படுவது தொகைமிக வருதல்"                           - 24 

    "உரியபொருள் அன்றி ஒப்புடைப் பொருள்மேல்
     தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்"                           - 25 

    "ஈண்டும் சிலீட்டம் உதாரதை காந்திபுலன் சமதை
     தூண்டும் சமாதி பொருட்டெளிவு ஓகம் சுகுமாரதை
     ஈண்டும்இன் பத்தொடு பத்தாவி என்னும் விதர்ப்பன [கௌடன்
    வேண்டும் இவற்றை விபரீதமாக விளங்கிழையே"               - வீ. 148 

    "செறிவார் சிலீட்டம் தொகைமிகை யாம்ஓகம் சீர்ச்சமதை
     அறிவார் அடியொப்ப தாகும் சமாதி அவனிக்கொப்பப்