என வரும்.
[மார்ப! புணர்ச்சிக்கண் முலை விலங்குங்காலும் புருவம் ஒசிய முனிபவளாய்ப்
பிரிவைச் சிறிதும் ஆற்றாத தலைவி கார் கால மாலைக்கண் நின்னைப் பிரிந்திருக்கும்
தனிமையைப் பொறுத்தல் இயலுமோ?
இப் பாடலில் குறில் இணை, குறில் நெடில், நெட்டொற்று என்பன அடுத்து ஓசை
நெகிழாது செறிந்திருக்கும் பெற்றி காண்க. இதனைச் சமனிலைப்பாற்படுத்து மெல்லினம்
மிக்குவரத் தொடுப்பதே வைதருப்பச் செறிவு எனவும் வல்லினம் மிக்குவரத்
தொடுப்பதே கௌடச் செறிவு எனவும், இடையினம் மிக்கு வரத் தொடுப்பதே
பாஞ்சாலச் செறிவு எனவும் கூறும் மாறன் அலங்காரச் செய்தியும்
உளங்கொளத்தக்கது.]