என வரும்.
[இப்பாடல் இடையெழுத்தே செறிய அமைந்துள்ளது. சந்தி காரணமாகவும்
உடம்படுமெய் காரணமாகவும் இச் செய்யுட்கண் உயிரெழுத்துக்கள் வரும்
இடங்களிலும் இடையின யகர வகரங்கள் புணர்ந்துள்ளமை காண்க.
இரவில் உலவும் கடல் அலைகளின் ஒலியே! தாயர் தூற்றும் வசைச் சொற்கள்
இவள் உயிரை ஈர்க்கின்றன. ஆயர் வேய்ங் குழல் ஓசை அழல் போலச் சுடுகிறது.
தனித்திருப்பாரை வெல்லும் எண்ணத்தை விடுத்து இவளுக்குத் துயரம் தருதற்கு
வருதலை நீக்குவாயாக.
இடையெழுத்தே செறியப் பாடிய இப்பாடல் கௌட நெறியாருக்கு ஏற்றது.
வைதருப்பர் இங்ஙனம் ஓரெழுத்தே முடிவுரை செறியப் பாடுதலை வேண்டார்.]