இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :
"இடர்த்திறத் தைத்துற; பொற்றொடி! நீ, இடித்துத் தடித்துச்
சுடர்க்கொடி திக்கனைத் திற்றடு மாற, துளிக்குமைக்கார்;
மடக்குயிற் கொத்தொளிக்க, களிக்கப்புக்க தோகை, வெற்றிக்
கடற்படைக் கொற்றவன் பொற்கொடித் தேரினிக் கண்ணுற்றதே"
என வரும்.
[பொற்றொடி! கார் கால வரவின்கண் இடி இடிக்கவும், மின்னல் மின்னவும், மேகம் மழை தூவவும், குயில் வருந்தவும், மயில் மகிழவும், கடல் போன்ற படையுடன் சென்று வென்று மீளும் தலைவனுடைய அழகிய கொடி கட்டப்பட்ட தேர் இப்பொழுது வந்துவிட்டது; ஆதலின் வருந்துலை நீக்கு - என்று தலைவனுடைய பகைவயின் பிரிவின்கண் கார்கால வரவில் ஆற்றாளாய வல்லெழுத்துக்களே மிக்குவரத் தொடுத்துள்ளமை கௌட நெறியார் மரபு பற்றியதாகும்.]
சொல்லினும் பொருளினும் சுவைபடு நெறியான் நல்லன தொடுக்கும் இன்பங்களுள் சீர் இடையிட்ட வழிமோனை முதலியன வரச் சொல்லினால் தொடுக்கும் இன்பம் வருமாறு :
"முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடல்ஓதம் மூழ்கிப்போக
அன்னைக்கு உரைப்பன் அறிவாய் கடலேஎன்று அலறிப்பேரும்
தன்மை மடவார் தளர்ந்துஉகுத்த வெண்முத்தம் தகைசூழ் கானல்
புன்னை அருப்பு ஏய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே எம்ஊர்"
என வரும்.
[சிறுமியர் தாம் கட்டிய மணல் வீட்டினைக் கடல் வெள்ளம் அழித்ததாக, அதனால் வருந்தித் தம் தாயரிடம் நிகழ்ச்சியைக்
|
|
|