70

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     கார்உருவக் கூந்தல் கதிர்வளைக்கைக் காரிகைத்தாம்
     ஓர்உரு,என் உள்ளத்தே உண்டு"

 என வரும். தொகைமிக வருதல் - தொகைச் சொல் தொடர்பு உண்டாக வல்லெழுத்து
 மிகுதல் சிறப்புடைத்தாய் வருதல்.

     [கலசம் போன்ற கொங்கை, ஒன்றோடொன்று செறிந்த தொடை, சிறிய அடிகள்
 அரவின் படம் ஒத்த அல்குல், போரிடும் கயல் போன்ற கண்கள், கனி போன்ற வாய்,
 கார்மேகம் போன்ற கூந்தல், ஒளிவிடும் வளையலணிந்த கைகள் இவற்றை உடைய
 நங்கை ஒருத்தியின் உருவம் என் உள்ளத்தில் உள்ளது - என்று உற்றது வினவிய
 பாங்கற்குத் தலைவன் சொற்ற இப்பாடலில் செங்கலசக்கொங்கை - உவமைத்தொகை;
 செறி குறங்கு - வினைத்தொகை; சீறடி - பண்புத் தொகை; அரவல்குல் -  உவமத்
 தொகை; பொருகயல் - வினைத்தொகை; கயற்கண் - உவமைத்தொகை;
 கனிவாய் - உவமைத்தொகை; கார்உருவக் கூந்தல் - உவமைத் தொகை;
 விளைக்கை - இரண்டாம் வேற்றுமைத்தொகை; ஓர்உரு - பண்புத் தொகை;
 என் உளம் - ஆறாம் வேற்றுமைத்தொகை - எனத் தொகைகள் பலவும்
 அமைந்திருப்பது காண்க.

     தண்டியலங்காரத்தில் இப்பாடல் பலவகைத் தொகைகள் உடைமையின்
 கௌட நெறிக்கும், "கால் நிமிர்த்தால்" என்ற பாடல் வைதருப்ப நெறிக்கும் வலிக்கு
 எடுத்துக்காட்டுக்களாக உள்ளன.]

     இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :

    "கால்நிமிர்த்தால் கண்பரிய வல்லியோ? புல்லாதார்
     மான்அனையார் மங்கலநாண் அல்லவோ? - தான
     மழைத்தடக்கை வார்கழல்கால் மானவேல் கிள்ளி
     புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு"

     என வரும்.