அணியியல் - குணவணி

73 

     மாங்கனியும் தீம்பாலும் வருக்கைச்சுளையும் சருக் கரையும் தம்முள் வேறுபட்ட
 சுவைய ஆயினும் கூறல் மதுரம் என்று அன்றே? அதுபோல, எழுத்துச் செறிவும்
 சொற்செறிவும் பொருட்செறிவும் செறிவு என்றே செப்புவது அல்லது பிறிது ஒருவகை
 பேசின் பெருகிய அகலம் உடைத்தாம் ஆகலின், அவை எல்லாம் உய்த்து உணர்ந்து
 கொள்க. பிறவற்றிற்கும் ஈது ஒக்கும்.

     ஆசிரியர் தொல்காப்பியனார் உவமம் ஒன்றனையுமே அணியாகக்
 கூறிஒழிந்தமையின் ஈண்டுக் கூறிய குணமும் மேல்கூறும் உவமை ஒழிந்த பொருள்
 அணியும் சொல்லணியும் ஆகிய அலங்காரங்கள் இவர் யாண்டுப் பெற்றார் எனின்,
 மேல் பாயிரத்துள் 'முன்னோர்நூலின் முடிபு நோக்கி' என்றதனால் பெரும்பான்மையும்
 தொல்காப்பியம் முதலிய தமிழ் நூல்களுள்ளும், சிறு பான்மை அலங்காரம் நுதலிய
 வடநூல்களுள்ளும் பெற்றார். என்க. அற்றேல், வடநூல் முதல்நூல் ஆயவாறு
 என்னைஎனின், சொல்வேறுபாடு அன்றிப் பொருள்வேறுபாடு இன்மையானும், அன்றியும்
 சங்கிரதம் பாகதம் அவப்பிரஞ்சம் என மூவகைப்படுத்தி அவற்றுள் சங்கிரதம்
 புத்தேளிர்மொழி எனவும் அவப்பிரஞ்சம் பாமர சாதிகளாகிய இழிசனர் மொழி
 எனவும் கூறி, பாகதம் எல்லார் நாட்டும் வழங்கும் மேலோர்மொழி என விளக்கி,
 அப்பாகத்தைத் தற்சமம் தற்பவம் தேசியம் எனப்பகுத்து, அவற்றுள் தற்பவம் ?நிதியம்
 துஞ்சும்? (மலைபடு - 478) எனவும், ?தசநான்கு எய்திய? (நெடுநல் - 115) எனவும்
 வடசொல் திரிந்து ஆவன என்றும், தற்சமம் - குங்குமம், உலகம், மலய மாருதம்
 என வடசொல்லும் பிறபாடைச் சொல்லுமாய்ப்