74

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 பொதுவாய் வருவன என்றும், தேசியம் - நிலம், நீர், தீ என அவ்வந்நாட்டுச்
 சொல்லேயாய்ப் பிறபாடை நோக்காதன என்றும் கோடலின் அச்சொல் வேறுபாடும்
 இன்மையானும் என்க.                                                 (16) 

     [தொல்காப்பியம் குறிப்பிடும் செய்திகளையும், வடமொழி அணியிலக்கண நூல்கள்
 குறிப்பிடும் செய்திகளையும் உட்கொண்டு இவ்வணியியல் அமைக்கப்பட்டுள்ளது.

     மொழி என்பது ஒன்றே. அது புத்தேளிர் போல்வாராகிய சான்றோரான்
 வழங்கப்படும் நிலையில் சங்கிரதம் எனப்படும்; இழிந்தார் வாய்ப்பட்டு வழங்கின்
 அவப்பிரஞ்சம் எனப்படும்; பொதுமக்கள் வழக்கில் பாகதம் எனப்படும்.
 அப்பாகதத்தின் ஒரு கூறே தேசியம் என்பது. எனவே, சான்றோர் கூற்றில்
 சங்கிரதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் செய்தியைப் பொதுமக்கள் கூற்றில் பயிலப்படும்
 தேசியமாகிய பாகதத்தில் அமைத்தற்கண் வேறுபாடு எதுவும் இன்று. வடமொழியும்
 தமிழும் பொது மொழிக்கூறுகளே என்ற கருத்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.]

16 

 636. பொருள்அணி சொல்அணிஎன அலங் காரம்
      இருவகை நெறியான் இயலும் என்ப.

     நிறுத்தமுறையானே அலங்காரம் உணர்த்துவன வற்றுள், இஃது அஃது
 இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் : பொருளான் உளதாகிய அணியும் சொல்லான் உளதாகிய அணியும்
 என அலங்காரம் இருதிறத்து இயலான் நடக்கும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

(17)