76

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     நிதரிசனம30 புணர்நிலை31 பரிவருத் தனையே32
     வாழ்த்தொடு33 சங்கீ ரணம்34பா விகம்35 எனப்
     போற்றும்ஏ ழைந்தும் பொருள்அணி என்ப.

 இது நிறுத்த முறையானே பொருள்அணி இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் :   தன்மைமுதல் பாவிகம் ஈறாகப் பேணிய முப்பத்தைந்தும் பொருள்
 அணி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

     தன்மை இயல்பு ஆகலான்முதற்கண்ணும், உவமை விகாரமாய்
 மிக்கவரவிற்றாய்ப் பிற வக்கிர நடை அலங்காரங்கட்கு உபகாரம் உடைத்து
 ஆகலான் அதன் பின்னும் எண்ணப்பட்டன. ஒழிந்தனவும் இவ்வாறு உய்த்து
 உணர்ந்து கொள்க.                                                   (18) 

     [தண்டியலங்காரம், வீரசோழியம், இந்நூல் இம்மூன்றினும் பொருளணிகள் 35
 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. மாறன் அலங்காரம் 64 பொருளணிகளைக்
 குறிப்பிடுகிறது. தொன்னூல் விளக்கத்தில் 30 பொருளணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 சந்திராலோகத்தில் பொருளணிகள் 100 இடம் பெற்றுள்ளன. குவலயானந்தம்
 120 பொருளணிகளை விளக்குகிறது. முத்து வீரியத்தில் 56 பொருளணிகள்
 புகலப்படுகின்றன. இவற்றை எல்லாம் சேர்த்து நோக்கத் தக்காங்கு அமைந்த
 பொருளணிகள் 118 கொள்ளத் தக்கன. இந்நூல் குறிப்பிடும் பொருளணிகள்
 அல்லாதன பற்றிய செய்திகளைப் பிற்சேர்க்கையில் காண்க.]

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 28

    "திரப்பியம் சாதி தொழில்குண மாந்தன்மை சீருவமை
     பரப்பிய ஒப்பாம் உருவக மாவ ததன்திரிவு
     கரப்பிய சொல்லெங்கு மொன்றே யுபகார மேல்விளக்கு
     நிரப்பிய மீட்சியும் மற்றதன் போலி நிரைவளையே"             - வீ. 152