அணியியல் - பொருள்அணி வகை

77 

    "கூறும் பிறபொருள் வைப்புத் தடைமொழி கொள்பொருளில்
     ஏறும் இரண்டிலொன் றேறும் விதிரேக மேதுவின்மை
     தேறும் விபாவனை யன்றித் திகழ்சுருக் கேபெருக்கே
     ஈறு மிகுநோக்க மேது நுணுக்க மிலேசமென்னே".
                                                              - வீ. 153 

    "அடைவு மகிழ்ச்சி சுவையூக்க மாம்பரி யாயமொழி
     அடைவு மலிதுணைப் பேறொடு தாத்த மவநுதியும்
     உடைவு நிகழுஞ் சிலேடை சிறப்பொ டுடனிலைச்சொல்
     புடையின் முரணுவ லாச்சொற் புரிவில் புகழ்ச்சிசுட்டே".
                                                              - வீ. 154 

    "ஆக்கும் ஒருங்கிய லேபரி மாற்றத்தொ டாசிவிராத்
     தாக்கு மொழிப்பா விகமிவை ஏழைந்துந் தண்டிசொன்ன
     வாக்கு மலியலங் கார மெனவறி; மற்றுமின்ன
     நோக்கு மெனிற்பல வாமலங் காரம் நுடங்கிடையே".
                                                              - வீ. 155 

    "அவற்றுள்
     புவனம் போற்றிய பொருளணி புகலின்
     தவலரும் பான்மைத் தன்மை உவமை
     உருவகம் உள்ளுறை ஒட்டுஉல் லேகம்
     ஒப்புமைக் கூட்டம் வேற்றுமைதிட் டாந்தம்
     தற்குணம் பிரத்தி யநீகம் சந்தயம்
     அற்புதம் நிதரிசனம் தற்குறிப்பு அதிசயம்
     சிலேடைபின் வருநிலை தீபகம் நிரல்நிறை
     பூட்டுவில் இறைச்சிப் பொருள்கோள் பொருள்மொழி
     அதிகம் வகைமுதல் அடுக்குஇணை எதுகை
     விரோதம் உபாயம் விசேடம் சமாயிதம்
     ஏது சுவை பரியாயம் இலேசம்
     தற்பவம் அசங்கதி தடுமா றுத்தி
     புணர்நிலை வேற்றுப்பொருள் வைப்பு விபாவனை
     ஆர்வ மொழிநெடு மொழிபரி வருத்தனை
     காரண மாலை காரிய மாலை
     ஏகா வலிபிர தீபம் பிறவணி
     புகழ்வதின் இகழ்தல் மாறுபடு புகழ்நிலை