"அதுவே,
உவமை பொதுநீங் குவமை புகழ்பொருள்
உவமை எதிர்நிலை உருவகம் திரிபே
பலபடப் புனைவே நினைப்பு மயக்கம்
ஐயம் ஒழிப்பு தற்குறிப்பு அதனோடு
உயர்வு நவிற்சி ஒப்புமைக் கூட்டம்
விளக்கு பின்வரு விளக்கே தொடர்முழுது
உவமை எடுத்துக் காட்டுவமை காட்சி
வேற்றுமை உடன்நிகழ்வு இன்மை நவிற்சி
சுருங்கச் சொல்லல் கருத்துடை யடையே
கருத்துடை யடைகொளி பல்பொருட் சொற்றொடர்
புனைவிலி புகழ்ச்சி புனைவுளி விளைவே
பிறிதின் நவிற்சி வஞ்சப் புகழ்ச்சி
வஞ்சப் பழிப்புஎதிர் மறைமுரண் விளைந்தழிவு