எனவும்,
[பவளத்தின் நிறம் ஈண்டு மேனிக்கு உவமை;
மூங்கிலின் வடிவு தோளுக்கு உவமை.
தலைவன் பண்டு போரிடற்குச் சென்ற தூரம், இப்பொழுது பொருள் தேடச்
சென்ற தூரத்துக்கு உவமை ஆதலின் இதுவும் வடிவுபற்றிய உவமையாய்ப் பண்பினுள்
அடக்கப்பட்டது.
இத்தகையனவற்றைப் பேராசிரியர் "வினைபயன்"
(தொ. பொ. 276) என்ற நூற்பாவின் "வகைபட வந்த" என்ற மிகையால் உவம
வகைகளுக்குள் அடக்கிக் கூறியுள்ளார்.]